தஞ்சை அருகே கொடூரம் - மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து கொலை!

செப்டம்பர் 26, 2018 630

தஞ்சை (26 செப் 2018): தஞ்சை அருகே மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் புதுக்குடியில் மனைவி மற்றும் 3 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அருகில் உள்ளோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் உடல்களை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தப்பியோடிய கணவரை வலை வீசி தேடி வருகின்றனர். இவ்விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...