கருணாஸ் ஜாமீனில் விடுதலை!

செப்டம்பர் 28, 2018 541

சென்னை (28 செப் 2018): முதல்வர் எடப்பாடியை அவதூறாக பேசிய குற்றச் சாட்டில் நடிகர் கருணாஸ் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்வர் எடப்பாடியை அவதூறாக பேசியது தொடர்பாக கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கருணாஸ்க்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆனால் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...