திருச்சி - சென்னை சாலையில் கார் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி!

செப்டம்பர் 30, 2018 471

திருச்சி (30 செப் 2018): திருச்சி - சென்னை சாலையில் கார் மீது லாரி மோதியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...