கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது!

அக்டோபர் 01, 2018 440

அரக்கோணம் (01அக் 2018): அரக்கோணம் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் என்ற பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான பயிற்சி தளம் உள்ளது. அங்கு இன்று காலை சேத்தக் ரக ஹெலிகாப்டரில் விமானி பயற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் பயிற்சியை முடித்துவிட்டு ஹெலிகாப்டரை தரையிறக்க முற்பட்டபோது திடீரென ஹெலிகாப்டர் பழுதாகி கீழே விழுந்து நொறுங்கியது.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்ளிட்டோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான முதல்கட்ட தகவலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் பழுதடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹெலிகாப்டரில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த வகையான ஹெலிகாப்டரின் அதிகபட்சமாகவே 3 பேர் தான் பயணிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து அடுத்தக்கட்ட விசாரணையும் தற்போது நடைபெற்று வருவதாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...