விநாயகர் சதூர்த்தி வசூல் தகராறில் ஒருவர் கொலை - பாஜக நிர்வாகி தலைமறைவு!

அக்டோபர் 02, 2018 633

கோவை (02 அக் 2018): கோவையில் விநாயகர் சதுர்த்திரிக்கு வசூல் செய்த பணத்தில் நடந்த கிடா விருந்ததில் நாகராஜ் என்பர் கொல்லப் பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக நிர்வாகி கந்தசாமி தலைமறைவகியுள்ளார்.

கோவை ஆலாந்துறை பகுதியில் பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி வசூல் நடத்தினர். அவ்வாறு வசூல் செய்த பணத்தில் மதுவுடன் கிடா விருந்து நடத்தி உள்ளனர். அப்பேதது வரவு செலவு குறித்து பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போதையில் பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் குட்டி(எ) கந்தசாமி நாகராஜ் என்பவரை கத்தியலால் குத்தினார். இதில் நாகராஜ் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலையில் தொடர்புடைய கந்தசாமி என்ற பாஜக நிர்வாகி தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...