திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை!

அக்டோபர் 02, 2018 525

வேலூர் (02 அக் 2018): மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி பெங்களுரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது 23 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த திருமுருகன்காந்தி இன்று மாலை விடுதலைசெய்யப்படலாம் என சிறைத்துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது திருமுருகன்காந்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர்மீதான அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்த நிலையில் ஆவணங்கள் சிறைத்துறையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திலிருந்து வேலூர் சிறைக்கு உத்தரவு சென்று இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்கள் கூட்டம் உள்ளிட்ட சிலவற்றை கருத்தில்கொண்டு இன்று மாலை 3.30 மணிக்கு விடுதலை செய்யப்படலாம் என சொல்லப்பப்பட்ட நிலையில் தற்போது திருமுருகன்காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...