சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு!

அக்டோபர் 04, 2018 556

தேனி (04 அக் 2018): பத்து வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 10 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டார். இதுதொடர்பாக சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததும், உயிருடன் விட்டால் காட்டிக்கொடுத்து விடுவார் என அவரை கொன்று உடலை கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் அளிக்கப் பட்ட தீர்ப்பில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்து. சிறுமியின் தாயாருக்கு கருணை தொகை வழங்கவும் தேனி மகிளா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...