ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் - வேறு கடைகள் மீது நடவடிக்கை இல்லையா?

அக்டோபர் 04, 2018 911

சென்னை (04 அக் 2018):சென்னை ஆசிஃப் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை சீல் வைத்துள்ளது.

சென்னையில், 18-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது ஆசிஃப் பிரியாணி ஹோட்டல். இவற்றுக்கு கிண்டியில் உள்ள தலைமை கிச்சனில் இருந்துதான் பிரியாணி தயாரித்து தினமும் அனுப்புகிறார்கள். ஆனால் அங்கு தயாரிக்கும் பிரியாணியில் சுத்தமான பொருட்கள் சேர்க்கப் படுவதில்லை என்றும், தரமற்ற மட்டன்கள் பிரியாணியில் சேர்க்கப் படுவதான குற்றச் சாட்டின் பேரில் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

ஆனால் சென்னையில் பல பிரியாணி கடைகள் புற்றீசலாய் முளைத்து விட்டன. அவைகளிலும் சுகாதாரமற்ற உணவுகள் வழங்குவதை காண்கிறோம் எனவே அனைத்து ஹோட்டல்களிலும் அதிரடி நடவடிக்கை தேவை என்கின்றனர் பொதுமக்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...