அதிமுகவில் புயலை கிளப்பியுள்ள ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

அக்டோபர் 06, 2018 699

சென்னை (06 அக் 2018): டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் அளித்துள்ள பேட்டி அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது.

தினகரனை, பன்னீர்செல்வம் சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றி விடவேண்டும் என்று வற்புறுத்தியதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சில தினங்கள் முன்பு பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன் கூட இந்த சந்திப்பு நடந்தது உண்மைதான் என்றும் இதை பன்னீர்செல்வம் மறுக்கவே முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 6.45 மணியளவில் தனது இல்லத்தில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தினகரனை தான் சந்தித்தது உண்மை தான் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ஏற்பாட்டின் பேரில் அவரது இடத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு தனக்கு நெருக்கமான ஒருவருக்கும் கூட தெரியாது என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த தகவல் என்பது மேலும் புதிதாக பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து சசிகலா விலகுமாறு வற்புறுத்திய நிலையில், ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்ம யுத்தம் என்ற பெயரில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார் பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதுதான் அவரது முக்கியமான கோரிக்கை. இந்த கோரிக்கை என்பது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் எடப்பாடி அணிக்கே தெரியாமல் தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...