இன்னொரு அபிராமியா? - இரண்டு மாத குழந்தையை கொன்ற தாய்!

அக்டோபர் 07, 2018 773

சென்னை (07 அக் 2018): தான் பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா - உமா. இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்புதான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சார்விக் என்று பெயரிட்டார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் சொன்னார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீசார் துரிதமாக விசாரணையில் இறங்கினர். 2 மாத குழந்தையை காணோம் என்று நேற்றெல்லாம் வேளச்சேரி பகுதியில் ஒரே பரபரப்பாக இருந்தது.

போலீசார் முதல்கட்டமாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுராத்திரி 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி கொண்டு தனியாக போய் கொண்டிருந்தது தெரிந்தது. அந்த பெண் யாராக இருக்கும் என்று போலீசார் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தனர்.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறிய 2 மாத குழந்தை அங்குள்ள ஏரி ஒன்றில் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டனர். இப்போது எந்தவித சந்தேகமும் இல்லாமல் போலீசாரின் வலுவான பார்வை குழந்தையின் தாய் உமா மீது விழுந்தது.

உமாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை கொன்றது தான்தான் என உமா ஒப்புக் கொண்டார். இதையடுத்து உமா கைது செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை கொன்றதற்கு உமா சொன்ன காரணம், "குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பகத்தில் அதிக வலி ஏற்பட்டதாம். அதனால்தான் குழந்தையை கொன்றாராம்".

ஆனால் இது காரணமாக இருக்க முடியாது என்றும் வேறு காரணம் இருக்கக் கூடும் என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...