கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண் கைது!

அக்டோபர் 08, 2018 1084

தேனி (08 அக் 2018): கள்ளக் காதலன் முஹம்மது யாசிக்குடன் சேர்ந்து கணவர் சமீரை கொலை செய்த ஃபிர்தோஸ் என்ற பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

மங்களூரை சேர்ந்த முகமது சமீர் அரபு நாட்டிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார். இதனால் மல்லாகாப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் பிர்தோஸ் அடிக்கடி சென்று தங்கி வந்தார். பெற்றோர் வீட்டின் அருகே டிரைவர் முகமது யாசிக்கின் சித்தி வீடு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை பிரதோசின் தந்தை ஜாசத்உசேன் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களுடனான காதல் தொடர்ந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி முகமது சமீர் சொந்த ஊருக்கு வந்தார். 15ந் தேதி காரில் அவர் குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றார். காரை முகமது யாசிக் ஓட்டினார். அப்போது முகமது சமீரை கொலை செய்ய பிரதோஸ் முகமது யாசிக்குடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இதில் மயங்கிய அவரை இறந்துவிட்டதாக நினைத்து காரின் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் வைத்து விட்டு, கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களுக்கு சென்றனர். அங்கு காட்டு பகுதியில் உடலை வீசி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அது முடியாமல் போகவே கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விடலாம் என்று புறப்பட்டு வந்தனர். அப்போது ஓசூர் அருகே வந்த போது குழந்தை அழுத சத்தம் கேட்டு முகமது சமீர் முனங்கி உள்ளார். இதையடுத்து அவர் இறக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அங்கு கொலை செய்ய கத்தி ஒன்றை முகமது யாசிக் வாங்கியுள்ளார்.

பின்னர் கொடைக்கானல் மலைப்பாதையில் பட்டறைப் பாறை அருகே வைத்து 2 பேரும் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உடலை வீசிச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற பிரதோசிடம், முகமது சமீர் தம்பி, அண்ணன் எங்கே? என்று கேட்டுள்ளார். அங்கு பதில் ஏதும் சொல்லாமல் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு முகமது யாசிக்குடன் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் பிர்தோசஸ். பின்னர் பெங்களூருவுக்கு வந்த போது போலீசில் அவர்கள் சிக்கி கொண்டனர்.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...