நக்கீரன் ஊழியர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு!

அக்டோபர் 10, 2018 726

சென்னை (10 அக் 2018): பிரபல பத்திரிகையான நக்கீரன் இதழில் பணிபுரிந்த அனைவர் மீதும் வழக்கு பதியபட்டுள்ளது.

ஆளுநரின் பணிகளை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதாக கைதுசெய்யப்பட்ட நக்கீரன் கோபாலை, சென்னை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் நக்கீரன் இதழில் பணிபுரிந்த அனைவர் மீதும் வழக்கு பதியபட்டுள்ளது.

நக்கீரன் இதழின் தலைமை ஆசிரியர் நக்கீரன் கோபால் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புனே செல்ல சென்னை விமான நிலையம் சென்றபோது, தனிப்படை போலீசார் நேறு காலையில் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டையில் வைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்

பத்திரிகையாளர் தரப்பில் ஆஜரான இந்து என்.ராம், ஒரு செய்தி வெளியிட்டதற்காக பிரிவு 124-யை பயன்படுத்த முடியாது என தெரிவித்தார். ஒரு செய்திக்காக பிரிவு 124யை பயன்படுத்தி கைது செய்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்றும் இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்தால் நாடு முழுவதுமே ஒரு தவறான முன் உதாரணமாக இருக்கும் என்றும் இந்து என்.ராம் கோரிக்கை வைத்தார்.

இந்த புகார் அளிக்கப்பட்டது ஆளுநருக்கு தெரியுமா என்றும் ஆளுநர் ஒப்புதலின்பேரிலேயே இந்த புகார் அளிக்கப்பட்டதா எனவும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து அடிப்படை ஆதாரமற்ற வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி, அவரை சிறைக்கு அனுப்ப மறுத்து விடுதலை செய்தார்.

இந்நிலையில் நக்கீரன் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாக ஆசிரியர்கள், நிருபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உட்பட 34 பேர் மீது பிரிவு 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...