புது மணப் பெண்ணை கணவனை விட்டுப் பிரித்து கள்ளக் காதலனுடன் சேர்த்து வைத்த போலீஸ்!

அக்டோபர் 10, 2018 1269

ராமநாதபுரம் (10 அக் 2018): கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணை காதலனுடன் போலீஸ் சேர்த்து வைத்த சம்பவம் ஏர்வாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்ஹா காவல்நிலையத்தில் கடந்த 8ம் தேதி திருமணமான தனது மகளை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரனை மேற்கொண்ட காவல்துறை சின்னஏர்வாடி பகுதியை சேர்ந்த வெண்ணிலவன் என்பவருடன் சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவர்கள் இருவரை மீட்டு ஏர்வாடி காவல்நிலையத்திற்க்கு கொண்டு வந்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து காவல்நிலையம் வந்த பெற்றோர் மகளை தங்களிடம் அனுப்புமாறு கூறினர். ஆனால் அந்த பெண்ணோ பெற்றோருடன் செல்ல மறுத்து கள்ளக் காதலனுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார்.

இதன் பின்னர், காவல்துறையினர் நளாயினியை அவரது கள்ள காதலனுடன் அனுப்பி வைத்தனர். அதையடுத்து பெண்வீட்டார் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கண்டுபிடித்து தருவதுதான் உங்கள் வேலை. அதைவிட்டு விட்டு கள்ளகாதலனுடன் அனுப்பி வைப்பது நல்லாயில்லை என்றனர்.

அதற்கு காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன், பெண்ணிற்கு வயது 22 ஆகிறது. அவர் யாருடன் செல்ல வேண்டும் என்று விரும்பிகிறாரோ அவருடன் தான் நாங்கள் அனுப்ப முடியும். நீதிமன்றமே கள்ளகாதலுக்கு தடையில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது. நான் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...