சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையான நக்கீரன் கோபால் கைது விவகாரம்!

அக்டோபர் 11, 2018 834

சென்னை (11 அக் 2018): நக்கீரன் கோபால் கைது விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களும் விவாதிக்கத் தொடங்கி விட்டன.

ஆளுநர் குறித்தும் நிர்மலா தேவி குறித்தும் கட்டுரை வெளியிட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. எனினும் நீதிமன்ற கிடுக்கிப் பிடி கேள்வியிலும், இந்து ஆசிரியர் ராமின் திறமையான வாதத்தாலும் இந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், கோபாலை விடுதலை செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தது. காலையில் கைதான கோபால், மாலையில் ரிலீசாகி வெளியே வந்தார்.

ஆனால் நக்கீரன் கோபால் விடுதலை ஆனாலும் இவ்விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்தது. ஏன் கைது செய்யப் பட்டார்? அப்படி என்ன கட்டுரை? என உலகில் அனைவரும் அது குறித்து ஆராய தொடங்கினர்.

தேசிய ஊடகங்களும் கூட இது என்ன மாதிரி கட்டுரை என்பதை விவாதித்தன. அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது

இந்த நிலையில், ஆளுநர் தொடர்பாக நக்கீரனில் வெளியான கட்டுரை, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் வேகமாக பரவி வருகிறது. இந்த கட்டுரைக்காகத்தான், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார் என்ற அறிமுகத்தோடு, அந்த கட்டுரை சுற்றி வருகிறது.

ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த இந்த கட்டுரை உலகின் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டன. மேலும் மொழி மாற்றம் செய்து பிற மாநிலங்களிலும் சமூக வலைத் தளங்களில் சுற்றுகிறதாம் இந்த கட்டுரை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...