சின்மயி கருத்தும் எஸ்வி சேகரின் மகிழ்ச்சியும்!

அக்டோபர் 11, 2018 915

சென்னை (11 அக் 2018): பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளதற்கு நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் குற்றச் சாட்டு வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சாட்டை வைரமுத்து மறுத்துள்ளார். எனினும் சின்மயி தொடர்ந்து வைரமுத்துவை தாக்கி பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “தன் வினை தன்னைச்சுடும்”. “தெய்வம் நின்று கொல்லும்”. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. “சொந்த காசுல சூன்யம்”. என்று கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் சின்மயி பதிவுகளை ரீட்விட்டும் செய்து வருகிறார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாச பதிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட எஸ் வி சேகர் சின்மயி பதிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...