தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துக்கள்!

October 11, 2018

சென்னை (11 அக் 2018): தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், "அடுத்த மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11,367 சிறப்பு பேருந்துகள் மற்ற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகள் என 20,567 சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும். அதே போன்று பண்டிகை முடிந்து திரும்ப சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு 4,207 பேருந்துகளும், பிற இடங்களுக்கு 7,635 பேருந்துகளும் இயக்கப்படும்" என தெரிவித்தார்.

மேலும் இந்த சிறப்பு பேருந்துக்களான முன்பதிவு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான கோயம்பேட்டில் 26 முன்பதிவுக் கவுண்டர்கள், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள், பூந்தமல்லி மற்ரும் மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா 1 கவுண்டர் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அண்ணாநகருக்குப் பதிலாக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், சைதாப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு பதில் கே.கே.நகரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும்

திருவண்ணாமலை செல்பவர்கள் கோயம்பேடு மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் ஏறிக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!