முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மரணம்!

அக்டோபர் 13, 2018 514

சென்னை (13 அக் 2018): முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக காலமானார்.

அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58. தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 - 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்தார். மேலும், 2006 - 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...