நிர்பயா ஸ்டைலில் தமிழகத்தில் மற்றும் ஒரு கொடூரம்!

அக்டோபர் 13, 2018 487

சென்னை (13 அக் 2018): வண்டலூரில் பார்வையற்ற இளம் பெண் கொடூரமான முறையில் வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

வண்டலூர் ரயில் நிலையம் பகுதியில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி(25). இவர் அந்த பகுதியில் குப்பை தொட்டிகளில் உள்ள பொருட்களை சேகரித்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் விஜயலட்சுமி ஆடை இல்லாமல் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார்.

விசாரனையில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் யாரோ குத்தியுள்ளனர்.எனவே, மர்ம நபர்கள் அவரை கற்பழித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...