திருச்சி விமான விபத்திற்கான காரணம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

அக்டோபர் 14, 2018 943

திருச்சி (14 அக் 2018): திருச்சியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

திருச்சியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கட்டுப்பாட்டு டவர் மற்றும் சுற்றுச்சுவர் மீது உரசிச் சென்றது. இந்த விபத்து நடந்த நிலையில், விமானத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் மீது இடித்துச் சென்றதை, விமானியோ, அதில் பயணம் செய்த பயணிகளோ உணரவில்லை. மாறாக, விபத்து நடந்த அடுத்த நிமிடமே, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே இப்படியொரு சம்பவம் நடந்தது விமானிக்கு தெரியவந்துள்ளது. எனினும், விமானத்தை தொடர்ந்து துபாய் நோக்கி செலுத்துவது என விமானிகள் தீர்மானித்தனர்.

பின்பு விமானம் கட்டுப் பாட்டு அறையின் உத்தரவின் பேரில் மும்பைக்கு திரும்பி அழைக்கப் பட்டு அங்கு தரையிறக்கப் பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து நடத்தப் பட்ட விசாரணையில் 136 பயணிகளுடன் சென்ற விமானத்தின் எடை அதிக அளவு இருந்திருந்தால் இதுபோன்ற விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், விமானத்தை மேலே கிளப்புவதற்கான ஸ்விட்ச் அழுத்துவதில் விமானி கவனக்குறைவாக செயல்பட்டிருந்தாலும் இதுபோன்ற விபத்து நேரிட காரணமாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே விமானத்தில் பணியில் இருந்த விமானிகள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...