பயணிகள் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்!

அக்டோபர் 18, 2018 622

திருச்சி (18 அக் 2018): நேற்று முன் தினம் திருச்சியிலிருந்து துபாய் சென்ற மற்றும் ஒரு விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.

நேற்று முன் தினம் இரவு ஏர் இந்தியா விமானம் வழக்கம் போல் திருச்சியிலிருந்து துபாய் புறப்பட்டது. 114 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம் ஓடுதளத்தில் பயணிக்க தொடங்கிய போது, இஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, பயணத்தை ரத்து செய்த விமானி, விமானத்தை அவசர அவசரமாக நிறுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த 114 பயணிகள் உயிர் தப்பினர்.

ஏற்கனவே கடந்த 11 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் , திருச்சியில் இருந்து புறப்பட்ட போது, அருகில் இருந்த சுற்றுச்சுவரை உரசிச் சென்றது. அதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளமை பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...