அரபு மொழியை பயிற்றுவிக்கும் புதிய மென்பொருள் கண்டு பிடிப்பாளர் காதர் மொய்தீனுடன் சந்திப்பு!

அக்டோபர் 18, 2018 776

திருச்சி (18 அக் 2018): தமிழ் ஆங்கிலம் வழியாக அரபு மொழியை பயிற்றுவிக்கும் புதிய சாஃப்ட் வேரை கண்டுபிடித்துள்ள மலேசிய தமிழர் நசுருல்லாக்கான் இ.யூ முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனை சந்தித்துப் பேசினார்.

மலேசியா நாட்டைச் சேர்ந்த தமிழர் நசுருல்லா கான் அரபு மொழியை உலகமயமாக்கல் தொடர்பான கான் சாப்வேட்வர் கண்டுபிடித்து அதில் தமிழ், ஆங்கிலம் வழியில் அரபு ழொழியை எளிமையாக கற்றுக்கொள்ள அரபு சாப்வேட்வர் கண்டுபிடித்து கல்லூரி மற்றும் அரபுக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.

அதன் படி தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிக்கு சென்று எளிய முறையில் அரபு ழொழியை கற்றுக்கொள்வது எப்படி என்று பாடங்களை நடத்தி வருகிறார். புருணை, மலேசிய, பினாங்கு ஆகிய பல்கலைகழங்களில் எளிய முறையில் அரபு மொழிமை எப்படி கற்றுக்கொள்வது என்பது பாடங்களை நடத்தி இருக்கிறார்.

இஸ்லாமிய ஜக்கிய நல கூட்டமைப்பு, கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, அய்மான் மகளிர் கல்லூரி, இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி, பாபநாசம் தாவூது பாட்சா கல்லூரி, சென்னை புஹாரி அரபிக்கல்லூரி, மணல்மேடு அன்னை கதீஜா கல்லூரி, பெரம்பலூர் அன்னை ஆயிஷா கல்லூரி , பிலாலியா அரபிக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று தமிழ், ஆங்கிலம் வழியில் எப்படி எளிய முறையில் அரபு ழொழியை கற்றுக்கொள்வது எப்படி பாடங்களை நடத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் இல்லத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர் நசுருல்லா கான் அரபி சாப்வேட்வர் பற்றி கம்யூட்டர் மூலம் எளிய முறையில் எப்படி கற்றுக் கொள்வது குறித்து விளக்கி கூறினார். பின்னர் பேராசிரியர் கே எம். காதர்மொய்தீன் எம்.எப்.எஸ். மாணவர்களுக்கு அரபு ழொழியை பற்றி ஓரு நாள் கருத்தரங்கம் நடத்துவது பற்றி மாநில பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கரிடம் கலந்து ஆலோசனை நடத்தி விரைவில் கருத்துரங்கம் நடத்துவது முடிவு செய்து உங்களை அழைத்து அரபு மொழியை பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள் என்று நசுருல்லா கானிடம் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...