சாலை விபத்தில் 3 பேர் பலி - உயிர் தப்பிய 8 மாத குழந்தை!

அக்டோபர் 20, 2018 574

திண்டிவனம் (20 அக் 2018): திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிந்தனர். 8 மாத குழந்தை அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளது.

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த மூக்கையன் தேவர் குடும்பத்தினர், தேனி அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று தங்களது 8 மாத குழந்தைக்கு காது குத்திவிட்டு சென்னை திரும்பினர். அப்போது திண்டிவனம் அருகே சாரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. காரில் பயணம் செய்த 7 பேரில் மூக்கையன் மனைவி ராமலட்சுமி, மகன் விஜயகுமார், மருமகள் சபரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத குழந்தை எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியது.

காரை ஓட்டி வந்த குன்றத்தூரைச் சேர்ந்த அருண் விபத்தில் சிக்கினார். அவரை மீட்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. ரெக்கவரி வேனும், ஜெ.சி.பி. வாகனும் வர தாமதமானதால் அவரை மீட்க காலமாதமானது என்று கூறுகின்றனர். மேலும், ஜான்சாமுவேல், வின்சகி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்தவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...