சபரிமலை விவகாரத்தில் ரஜினி குழப்பமான பதில்!

அக்டோபர் 20, 2018 463

சென்னை (20 அக் 2018): சபரிமலை விவகாரத்தில் ரஜினி குழப்பமான பதில் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி," கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத வேலைகள் நடந்து முடிந்து உள்ளது. நல்ல நேரம், காலம் பார்த்து அறிவிப்பேன் என்று கூறினார்.

சபரிமலை தீர்ப்பு குறித்த விவகாரத்தை பற்றிய கேள்விக்கு, பெண்களுக்கு எல்லாவற்றிலும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு சம்பிரதாயம் ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையீட கூடாது என்பதே என் கருத்து என்று கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் எனவும், மத தொடர்பான விஷயங்கள், சடங்களில் கொஞ்சம் பார்த்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் எழுந்துள்ள மீடூ விவகாரம் குறித்த கேள்விக்கு, மீடூ பெண்களுக்கு சாதகமான ஒன்று. ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது என்றும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். வைரமுத்து தன் மீது குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டார். அதுபோன்று ஒரு சம்பவமே நடக்கவில்லை. அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வழக்கை சந்திப்பதாகவும் வைரமுத்து கூறியுள்ளதை எடுத்துக் காட்டி ரஜினி இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் போது எனது நிலைபாட்டை வெளியிடுவதாகவும் கூறினார். பேட்டியை முடிக்கும் போது, பேட்ட பராக்.. என்று பேட்ட படத்தின் வசனத்தை பேசிவிட்டு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...