முடிவுக்கு வந்த எச்.ராஜா மீதான வழக்கு!

அக்டோபர் 22, 2018 661

சென்னை (22 அக் 2018) நீதிமன்றத்தை தகாத வார்த்தையில் பேசிய வழக்கில் எச்.ராஜா மன்னிப்பு கேட்டதை அடுத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம், நிர்மல் குமார் அமர்வு, எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதனை ஏற்று இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜரான எச்.ராஜா, “உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசிவிட்டேன்” எனக்கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மனுத்தாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...