விரைவில் எதிர் பாருங்கள் - பொடி வைத்து பேசும் டிடிவி ஆதரவாளர்!

அக்டோபர் 23, 2018 557

நெல்லை (23 அக் 2018): விரைவில் தமிழகத்தில் பெரிய மாற்றம் வரும் என்று டிடிவி ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ் செல்வன் பேசுகையில், "தற்போது வரை 20 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்துக்கு வந்துள்ளார்கள். மேலும் பாபநாசம் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு குற்றாலத்தில் இன்னும் இரண்டு நாட்கள் தங்க உள்ளார்கள். அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 18 தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பு வந்த பின்னர் தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் ஏற்படும். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய கூடிய மாற்றம் வரும் மென கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...