ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்று நோய்க்கு ஒருவர் பலி!

அக்டோபர் 25, 2018 655

தூத்துக்குடி (25 அக் 2018): ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்று நோய்க்கு கணேசம்மாள் என்ற பெண்மணி பலியாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி. கிராமத்தை சேர்ந்தவர் கணேசம்மாள். 50 வயதான இவர் கடந்த ஒரு வருடமாக புற்று நோய் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள ஊர்களில் ஒன்றுதான் பண்டாரம் பட்டி. இந்த ஊர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், கர்ப்பப்பை பிரச்சினை என பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இக்கிராம மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தச் சூழலில்தான் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கணேசம்மாள் அவர்கள் உயிரிழந்துள்ளார்..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...