திருச்சியிலிருந்து ஷார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிர் தப்பிய 103 பயணிகள்!

அக்டோபர் 28, 2018 704

திருச்சி (28 அக் 2018): திருச்சியிலிருந்து ஷார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு இருந்தது கண்டு பிடிக்கப் பட்டதால் 103 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

சார்ஜாவில் இருந்து தினமும் அதிகாலை 2.10 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வரும். மீண்டும் காலை 3.05 மணிக்கு சார்ஜா புறப்பட்டு செல்லும். வழக்கம்போல் நேற்று அதிகாலை 115 பயணிகளுடன் விமானம் திருச்சி வந்தது. பயணிகள் இறங்கிய பின், அந்த விமானத்தில் சார்ஜா செல்ல 103 பயணிகள் ஏறி அமர்ந்தனர்.புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 103 பயணிகளும் இறக்கப்பட்டனர். அவர்கள் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் மாற்று விமானத்தில் 103 பேரும் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...