108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கும் - மிரட்டும் ஊழியர்கள்!

அக்டோபர் 28, 2018 499

சேலம் (28 அக் 2018): தீபாவளி போனஸ் வழங்காவிட்டால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளி அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் துணை பொதுச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டு போனஸ் பெறவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுவும் மாதந்தோறும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, போனஸாக வழங்குவதை ஏற்க முடியாது. ஒருமாத ஊதியத்தை போனஸாக வழங்குமாறு, திட்ட இயக்குநர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரிக்கு மனு அளித்திருந்ேதாம். ஆனால், இதுவரை பதில் வரவில்லை. எனவே, வரும் தீபாவளி அன்று, மாநிலம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதன்படி வரும் 5ம் ேததி இரவு 8 மணியிலிருந்து, 6ம் தேதி இரவு 8 மணிவரை ஸ்டிரைக் நடைபெறும்.

தொழிலாளர் துறை ஆணையர் தலைமையில், வரும் 30ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், தீபாவளியன்று திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஊழியர்களின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பால், தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...