ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை!

அக்டோபர் 31, 2018 526

சென்னை (31 அக் 2018): ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மருந்து விற்பனையினை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவில்... ஆன்லைன் மருந்து விற்பனை மூலம் சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே காலாவதியான, போலியான மருந்துகள் மக்களை சென்றடையும் ஆபத்துள்ளது, மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டில்லாமல் விதிமீறி மருந்துகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி., ஆன்லைன் மூலம் மருந்து விற்க இரண்டு வாரம் இடைக்கால தடைவிதிதுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வரும் 20-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...