நியாய விலை கடைகளுக்கு தீபாவளி விடுமுறை இல்லை!

அக்டோபர் 31, 2018 493

சென்னை (31 அக் 2018): தீபாவளிக்கு முந்தைய நாளான 5 ஆம் தேதி நியாய விலை கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான 5 ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் தமிழக நியாய விலை கடைகளுக்கு விடுமுறை இன்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்ததுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலை கடைகளும் நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 02.11.2018 அன்று வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் 02.11.2018, 03.11.2018, 04.11.2018 மற்றும் 05.11.2018 ஆகிய 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து நியாயவிலை கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.

நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளான முதல் வெள்ளிக்கிழமை அதாவது 02.11.2018 அன்று பணி நாளாக செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது வெள்ளிக் கிழமை அதாவது 16.11.2018 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...