வெளி நாட்டில் சிக்கித் தவிக்கும் பட்டுக்கோட்டை இளைஞரை மீட்கக் கோரி கலெக்டரிடம் மனு!

அக்டோபர் 31, 2018 589

தஞ்சாவூர் (31 அக் 2018): வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் வீரப்பன் என்ற பட்டுக் கோட்டை இளைஞரை மீட்கக் கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவர் மலேசியாவில் உள்ள சலூன் கடையில் கடந்த ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீரப்பன் வேலை செய்யும் இடத்தில் சிலர் கொடுமைப்படுத்தியதோடு வேலை செய்யவிடாமல் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன வீரப்பன் ஊருக்குத் திரும்பிவிட நினைத்து முதலாளியிடம் கூற அவரும் பார்க்கலாம் சரி எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து 3 நாள்கள் கழித்து கடையில் 2 லட்சம் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் கூறி ஊருக்கு அனுப்பாமல் கடை உரிமையாளர் வீரப்பனை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும், குடும்பத்தினருக்கு போன் செய்து 2 லட்சம் பணத்தைக் கொடுத்தால் தான் மகனை ஊருக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மருது ரத்த காயத்துடன் இருப்பதுபோல் உள்ள போட்டோவும் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் பேசும் ஆடியோ ஒன்றையும் வீரப்பன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். மேலும், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அதில் அழுதபடியே கூறியுள்ளார். அதன் பிறகு வீரப்பனின் தாய் இந்திரா அழுதபடியே தன் உறவினர்களுடன் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...