தொழிலதிபரின் மகன் என்றால் பெரிய கொம்பா?

நவம்பர் 01, 2018 787

சென்னை (01 நவ 2018): சென்னையில் சிறுமியை கார் ஏற்றிக் கொன்ற தொழிலதிபரின் மகனை ஜாமீனில் வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் தாகூர் நகரை சேர்ந்த விஜயலட்சுமி, தனது அண்ணன் மகள் 6 வயது சுசியுடன், சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே தாறுமாறாக வந்த கார் மோதியதில் விஜயலட்சுமி மற்றும் சிறுமி சுசி ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி சுசி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்துக்கு காரணமான சரண் என்றை இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தொழிலதிபரின் மகன் என்பதால் இளைஞரை கைது செய்யாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...