சென்னை மெரினாவில் பெண்ணின் உடல் - வன்புணர்ந்து கொலையா?

நவம்பர் 04, 2018 622

சென்னை (04 நவ 2018): சென்னை மெரினாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினாவில் இன்று காலை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பெண் ஒருவர் உயிரற்றுக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அந்த பெண்ணின் உடலில் ஏகப்பட்ட ரத்தக்காயங்களை பார்த்த போலீஸார், ஒரு வேளை அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். சில நாச கும்பல் நள்ளிரவில் இந்த வேலையை செய்திருக்கலாம் என யூகிக்கின்றனர்.

மேலும் இந்த பெண்ணின் மர்ம மரணத்திற்கு வேறேதும் காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை துவங்கியுள்ளனர். பெண் ஒருவர் மெரினாவில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...