நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அனிதா பெயரில் ஒரு செயலி உருவாக்கம்!

நவம்பர் 04, 2018 523

புதுடெல்லி (04 நவ 2018): நீட்டுக்காக உயிர் நீத்த மாணவி அனிதாவின் பெயரில் டெல்லியை சேர்ந்த மாணவி செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

பிளஸ் டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் நுழைய முடியாத ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருந்தபோதும் மத்திய அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக டெல்லியை சேர்ந்த இனியா என்ற மாணவி AneeTa என்ற பெயரில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் நீட் தேர்வு சாம்பிள் கேள்விகள், பதில்கள் தேர்வுக்கு தயாராகும் முறைகள் ஆகியவை உள்ளன. இந்த செயலி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...