கஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 12, 2018 691

சென்னை (12 நவ 2018): கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் "கஜா புயல் நவம்பர் 15 ஆம் தேதி முற்பகல் நாகை - சென்னை இடையே கரையை கடக்கும். இதனால் நவம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் புயல் கரையைக் கடக்கும் வரையில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.

சென்னையை பொருத்தவரை மழை இருக்கும், ஆனால் புயலின் பாதிப்பு இருக்காது. புயலை ஒட்டி இருக்கும் மழை இருக்கும், காற்றின் வேகம் இருக்காது. மழைக்கான ரெட் அலர்ட் நிர்வாகத் துறையினரை எச்சரிச்ச கொடுக்கப்பட்டுள்ளது. அது பொதுமக்களுக்கானது அல்ல என வானிலை ஆய்வு மையம் தகவ்ல் வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...