ஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்!

நவம்பர் 13, 2018 960

திருச்சி (13 நவ 2018): திருச்சி அருகே ஆசிரியை குளித்ததை 11 ஆம் வகுப்பு மாணவன் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரம்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெளியூர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டு குளியலறையின் வென்டிலேசன் ஜன்னலின் வெளிப்புறம் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. அதன் வழியே பக்கத்து வீட்டில் இருக்கும் 11 ஆம் வகுப்பு மாணவன் ஆசிரியை குளிப்பதை பார்த்ததாக தெரிகிறது.

அதன் வழியே பக்கத்து வீட்டில் இருக்கும் 11 ஆம் வகுப்பு மாணவன் தொடர்ந்து வீடியோ எடுத்து அவனது நண்பர்களுடன் இணைந்து ரசித்து வந்துள்ளான்.

இதனை அறிந்த ஆசிரியை அவனது பெற்றோரை அழைத்து எச்சரித்துள்ளார். இந்த சூழலில் ஆசிரியையின் வீட்டில் துண்டு சீட்டு ஒன்று கிடந்துள்ளது. அதில் யாரிடமாவது புகார் செய்தால், குளிக்கும் போது எடுத்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வெளியிடுவோம் என்று மிரட்டப்பட்டிருந்தது.

நிலைமை விபரீதமானதை அடுத்து, உடனே தனது கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் வையம்பட்டி போலீசாரை நாடியுள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் துண்டு சீட்டில் இருந்த கையெழுத்தும், பக்கத்து வீட்டு மாணவனின் வீட்டுப்பாட நோட்டில் இருந்த கையெழுத்தும் ஒரே மாதிரி இருந்தது கண்டறியப்பட்டது.

அவனிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான விஷயம் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை 3 மாணவர்கள் மறைந்திருந்து ரசித்துள்ளனர். ஒருகட்டத்தில் செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்து வந்துள்ளனர்.

இதையடுத்து 3 மாணவர்களையும் கைது செய்து, செல்போன், மெமரி கார்டு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...