கஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை!

நவம்பர் 15, 2018 504

சென்னை (15 நவ 2018): கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால் நாளை தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 150.5 கி.மீ. தொலைவில் உள்ள கஜா புயலானது மேற்கு, தென்மேற்கு திசையில் 16.8 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

இதனால் ராமநாதபுரம், தஞ்சாவூர் புதுச்சேரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக் கிழமை) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் புயல் தாக்கம் காரைக்காலில் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் கரையை நெருங்கும் நிலையில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...