பெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து!

நவம்பர் 15, 2018 516

அரியலூர் (14 நவ 2018): தந்தை பெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

திராவிட கட்சியினர் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியாரை தேச துரோகி' என்றும், அவரது சிலையை அகற்ற வேண்டும் என்றும் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த எச்.ராஜா தற்போது 'பெரியார், மணியம்மை குறித்த பாடங்களை பாடப்புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற எச்.ராஜா, அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'பெரியார்-மணியம்மை குறித்த பாடங்களை படிக்கும் குழந்தைகள் எப்படி ஒழுக்கமாக வளராது." என்று தெரிவித்துள்ளார்.

எச் ராஜாவின் கருத்துக்கு பலதரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...