கஜா புயலில் காரைக்கால் கடலோர கிராமங்களில் இறந்து கரை ஒதுங்கிய வனவிலங்குகள்!

நவம்பர் 18, 2018 546

காரைக்கால் (18 நவ 2018): கஜா புயலில் காரைக்கால் கடலோர கிராமங்களில் இறந்து கரை ஒதுங்கிய 49 மான்கள், 10 காட்டுப்பன்றி மற்றும் வனவிலங்கு, பறவைகளை பொதுமக்கள் ஆச்சரியத்துன் வேடிக்கை பார்த்தனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் கடந்த 14-ஆம் தேதி இரவு முதல் 15-ஆம் தேதி அதிகாலை வரை பலத்த காற்றுடன், நாகப்பட்டினம் மற்றும் வேதாரணயத்திற்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயலில், காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தது. 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாலையில் விழுந்தது. 11 மீனவ கிராமத்தில், 80-க்கும், மேற்பட்ட பைபர் படகுகள் பல மீட்டர் தூக்கியெறியப்பட்டு சேதமானது. நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதமானது. பல இடங்களில் ஓடு, மாடி, கூறை வீடுகள் மீது மரங்கள் முறைந்து விழுந்ததில், வீடுகள் சேதமானது. மேலும், காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு வந்த தூர்வாரும் கப்பல், மும்பை செல்லும் முன் மேலவாஞ்சூர் அருகே கரை தட்டி சேதமானது,. இதனை மீட்க மும்பையிலிருந்து மீட்பு கப்பல் மற்றும் மீட்பு பணியாளர்கள் வந்தவண்ணம் உள்ளனர்

இந்நிலையில், கஜா புயல் காரணமாக, காரைக்காலை அடுத்த வேதாரண்யம், கோடியக்கரை காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் இருந்த 49 மான்கள், 10 காட்டுப்பன்றிகள் மற்றும் வரி குதிரை, குதிரை, நாரை, செங்கால்நாரை, கொக்குகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் இறந்து நிலையில் கரை ஒதுங்கியது, விபரம் அறிந்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி லதா மங்கேஸ்கர், நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் வனத்துறை அதிகாரி மதியழகன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுச் செய்து விசாரணை நடத்தி, இறந்த வனவிலங்கு மற்றும் பறவைகளை அதே கடற்கரையோரம் குழி தோண்டி புதைத்தனர்.

இதுவரை எந்த புயலிலும், இதுபோன்ற வனவிலங்கு பறவைகள் கரை ஒதுங்காததால், செய்தி அறிந்த பொதுமக்கள் பலர் கரை ஒதுங்கிய விலங்கு மற்றும் பறவைகளை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். இறந்து வரிசையாக அடிக்கி வைத்திருந்த விலங்குகளோடு பலர்
செல்போனில் செல்பி எடுத்துகொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...