கஜா புயல் பாதிப்புக்கு நிதியுதவி அளித்து உதவிக் கரம் நீட்டியுள்ள விஜய் சேதுபதி!

நவம்பர் 19, 2018 540

சென்னை (19 நவ 2018): நடிகர் விஜய் சேதுபதி கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்கு டார்ச் லைட் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப் படும் என்றும் உடனடியாக ரூ 25 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கயில், ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்“ என்றார்.

இதனிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...