புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் உதவி!

நவம்பர் 20, 2018 497

காரைக்கால் (20 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப் பட்ட காரைக்கால் பகுதிகளில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காரைக்கால் மாவட்டம் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைக்காக சாலை போக்குவரத்து மற்றும் மின் கம்பங்கள் அகற்றும் பணியுடன் புணர் நிர்மாணத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றி கொண்டு இருக்கிறது.

தற்போது தாங்கள் வசிக்கும் வீட்டின் மேற்கூரை சிதிலமடைந்த நிலையில் சுமார் காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 1000 -த்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

வீட்டின் மேற்கூரை சிதிலமடைந்தவர்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழ்மையான குடும்பங்களை கண்டறிந்து தொடர்ந்து வர இருக்கும் மழை காலத்தை கருத்தில் கொண்டு தற்சமயம் மேற்கூரையை சரி செய்வதற்கான தார்பாய்கள் மற்றும் இதர கட்டுமான பொருட்களை பாப்புலர் ஃப்ரண்ட் காரைக்கால் மாவட்டம் சார்பில் வழங்கி வருகிறோம்.

முதற்கட்டமாக இன்று 19.11.2018 காரைக்கால் மாவட்டம் கும்சகட்டளை மற்றும் களயங்கட்டி மதகு பகுதிகளில் ஆய்வு செய்ததின் பெயரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த 57 குடும்பங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் காரைக்கால் மாவட்ட தலைவர் முஹம்மது ஹசன் குத்தூஸ் தலைமையில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான தார்பாய் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் வழங்கப்பட்டது.

-நூர்தீன்
ஊடக பொறுப்பாளர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...