கஜா புயல் ருத்ரதாண்டவத்தில் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு இடையூராக உள்ளது. மேலும் நோயாளிகளை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மல்லிப்பட்டினத்திலிருந்து மனமேல்குடிக்கு நோயாளியை அழைத்துச் சென்றபோது போராட்டக் காரர்கள் அனுமதிக்காத்தால் நோயாளிகளை திரும்ப மல்லிப்பட்டினத்திற்கே திரும்ப அழைத்து வந்ததாக நோயாளியின் உறவினர் முகநூலில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
எனவே போராட்டக்காரர்கள் நோயாளிகள், நிவாரணப் பொருட்கள் கொண்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவன வாகனங்களுக்கு வழி விடுவது மிக முக்கியமானதாகும்.