கஜா பேரிடரில் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியின் செயல் மகத்தானது - குவியும் பாராட்டுகள்!

நவம்பர் 23, 2018 1195

சென்னை (23 நவ 2018): கஜா பேரிடரில் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியின் செயலை பலரும் பாராட்டியுள்ள நிலையில் தமிழ் நாடு மாநில கூட்டமைப்பு அமைப்பாளர் பாரி மைந்தன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேசத்திற்கினிய சகோதரர் தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு,

வணக்கம்! நலம் சூழ்க.

தமிழக பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவரின் தகவல் படி கஜா புயலால் 90 சட்டமன்ற தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட தொகுதிகள் என 24 தொகுதிகள் இருக்கின்றன.

இதில் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் கூட புயல் அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி மக்களோடு இருந்து கடமை ஆற்றவில்லை. ஆனால் தாங்கள் மட்டுமே விதிவிலக்காக புயல் விசும் முன்பே தொகுதியில் முகாமிட்டு தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு பணிசெய்யத் துவங்கினீர்கள். புயலுக்குப் பிந்தய செயல்பாட்டிலும் உங்களுக்கு இணையாக எந்த சட்டமன்ற உறுப்பினரும் பணியாற்றவில்லை என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்து வருகிறது. மக்களோடு மக்களாய் இருந்து அவர்களின் துன்பங்களை துயரங்களை நீக்குவதே ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை என்பதை செயல்படுத்தி இருக்கிறீர்கள். தங்கள் செயல்பாடு அரசியல் எல்லைகளைக் கடந்து போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. தங்களின் பிரக்ஞை நிறைந்த செயல்பாட்டிற்கு தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும், பொதுவாழ்வை நேசிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் மாணவருக்கும் முன் உதாரணமாக தொடர்ந்து செயல்பட வேண்டுமென விரும்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...