கஜா பாதித்த அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவ மனையில் இலவச மருத்துவ முகாம்!

நவம்பர் 24, 2018 792

அதிராம்பட்டினம் (24 நவ 2018): கஜா புயல் அதிகம் பாதித்த தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

கஜா கோரத்தாண்டவம் ஆடிய பகுதிகளில் அதிக சேதத்தை ஏற்படுத்திய பகுதிகளில் ஒன்று அதிராம்பட்டினமும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும். இந்நிலையில் அங்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவிகள் புரிந்து வருகின்றன. அதேபோல எஸ்டிபிஐ, தமுமுக, பாப்புலர் ஃப்ரெண்ட், நாம் தமிழர், மனித நேய ஜனநாயக கட்சி மற்றும் இன்னும் பல கட்சி சாரா தன்னார்வலர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை (25 நவம்பர் 2018) அன்று சென்னை எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி சார்பில் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவ மனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதனை அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் பயன்படுத்திக் கொள்ளவும்.

தகவல்: அழகப்பன் அப்துல் கரீம்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...