தமுமுகவுக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குமார் குடும்பத்தினர்!

நவம்பர் 24, 2018 818

திருச்சி (24 நவ 2018): சவூதி அரேபியா ரியாத்தில் மரணம் அடைந்த குமார் என்பவரது உடல் தமுமுகவின் முயற்சியால் அவரது ஊருக்கு அனுபி வைக்கப் பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா உஞ்சினி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் படையாட்சியார் என்பவரின் மகன் ப.குமார் படையாட்சி அவர்கள் கடந்த 15/11/2018 வியாழக்கிழமையன்று சவுதி அரேபியா ரியாத்தில் மாரடைப்பால் காலமானார் இந்த நிலையில் அவருடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த அவருடைய சகோதரர் ராஜா அவர்கள் தமுமுக ரியாத் மண்டலத்தின் மக்கள் தொடர்பாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக் அவர்களை தொடர்புகொண்டு இறந்துபோன தனது சகோதரர் குமார் படையாட்சியார் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு தமுமுகவை நாடினார்.

உடனடியாக ரியாத் மத்திய மண்டலத்தில் சமூகநலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீத் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது திருப்பூண்டி அப்துல் ஹமீத் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் தொடர்பாளர் ஷாக்கீர் பேக் அவர்களும் இறந்தவரின் சகோதரர் ராஜா அவர்களும் இந்திய தூதரகத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு துரிதமாக செயல்பட்டதன் காரணமாக 22/11/2018 வெள்ளிக்கிழமை அன்று ரியாத்தில் இருந்து இலங்கை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குமார் உடலை தமுமுக மாநில பொருளாளர் அண்ணன் சபியுல்லாஹ் மற்றும் திருச்சி தமுமுக மாவட்ட தலைவர் முகமது ரஃபிக் அவர்களின் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் குமாரின் உடலை அவருடைய சொந்த கிராமத்துக்கு கொண்டு போய் சேர்த்தவுடன் குமாரின் குடும்பத்தினர் ரியாத் மண்டல தமுமுக விற்கும் திருச்சி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...