கஜா புயலை அடுத்து விவசாயிகளின் தொடர் மரணம் - அகலாத சோகம்!

நவம்பர் 26, 2018 662

தஞ்சாவூர் (26 நவ 2018): கஜா புயல் பாதித்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

கஜா புயலின் கோர தாண்டவத்தில், பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. இதில் இருந்து மீளாத, விவசாயிகள் வேதனையில் மூழ்கி உள்ளனர்.

புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சிலர் மனம் வெம்பி தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர ராஜன் என்ற விவசாயி, மனம் வெதும்பி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். வன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி 52, வாழ்வாதாரமாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் புயலில் நாசமானதால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட்டார். இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.

இந்நிலையில் இன்று காலை, ஒரத்தநாடை அடுத்த திருமங்கலக்கோட்டை கிராமத்தில் நடராஜன் என்பவர் விழுந்த தென்னை மரத்தை அகற்றும்போது அவர் மீது தென்னை சாய்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல, மன்னார்குடி அடுத்துள்ள எடமேலையூரில் புயலில் சம்பா பயிர் சேதமடைந்த சோகத்தில் விவசாயி செல்வராஜ், 55 என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கனவே வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களிடையே இப்படி விவசாயிகளின் அடுத்தடுத்த மரணங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...