பாஜக மீது நடிகை காயத்ரி ரகுராம் கடும் தாக்கு!

நவம்பர் 26, 2018 870

சென்னை (26 நவ 2018): தமிழக பாஜக மீது, நடிகையும் பாஜகவின் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் செயற்குழுவில் காயத்ரி ரகுராம் கடுமையாக சாடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அருகே மது போதையில் கார் ஓட்டியதாக காயத்ரி ரகுராம் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதாகவும், அபராதம் கட்டியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அதனை மறுத்து பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் உள்ளனர். இந்த பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன்.

என் மீது களங்கம் சுமத்தும் வகையில் சிலருக்கு கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. நான் சமீபகாலமாக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. ஆனாலும் சில இளம் மனதுகள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த தந்திரங்களில் ஈடுபடுகின்றன. இளந்தலைவர்களுக்கு வாழ்த்துகள்.

எல்லாம் கர்மா. அவர்கள் என்றாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆனால், இதே மோசமான இதயத்தோடு அல்ல. இப்படிப்பட்ட அரசியல் பற்றி பதிவிடக்கூட எனக்கு விருப்பமில்லை

இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...