கஜா புயல் தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

நவம்பர் 27, 2018 673

மதுரை (27 நவ 2018): கஜா புயல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் நிவாரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. .

இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையின்போது நீதிபதி, கஜா புயல் பாதிப்புகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த ஆய்வு முடித்த இரண்டு நாட்களில் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கஜா புயல் பாதிப்பு பகுதிக்ளில் ஆய்வு செய்யும் மத்திய குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய குழு அறிக்கையை தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டதா என்பதை டிசம்பர் 6-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...