நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கம்!

நவம்பர் 28, 2018 616

சென்னை (28 நவ 2018): நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை என்று தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை மறுத்த காயத்திரி ரகுராம் தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று குற்றம் சாட்டினார். காயத்திரி ரகுராம் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பதால் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இந்த குற்றச்சாட்டு பற்றி கேட்டார்கள். அதற்கு தமிழிசை ‘காயத்திரி ரகுராம் பா.ஜனதாவிலேயே இல்லை’ என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் தமிழிசை கருத்துக்கு காயத்ரி ரகுராம் காட்டமாக பதிலளித்துள்ளார். மேலும் என்னை நீக்க தமிழிசைக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...