கஜா புயல் நிவாரண நிதி இரண்டாவது கட்டமாக 353 கோடி நிதி ஒதுக்கீடு!

டிசம்பர் 01, 2018 686

புதுடெல்லி (01 டிச 2018): கஜா புயல் இரண்டாவது கட்ட நிவாரண நிதியாக 353 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயல் நிவாரணமாக 15000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு கோரினார்.

அதைத்தொடர்ந்து, சென்னை வந்த மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வறிக்கை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக ரூ.353 கோடி நிதியை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிவாரண தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்துள்ள இடைக்கால அறிக்கையின் படியும், மத்திய குழுவின் ஆய்வறிக்கையின் படியும் இந்த நிதியை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...